2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

200 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலங்கை மெதடிஸ்த திருச்சபை 200ஆவது ஆண்டு நிறைவு விழாவினை இவ்வருடம் இலங்கை முழுவதிலும் கொண்டாடி வருகின்றது.இதன் ஒரு அங்கமாக மத்திய மறைமாவட்டத்தின் முதல் சேகர மட்டத்திலான கொண்டாட்டங்கள்; நுவரெலியாவில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.

நுவரெலியா சேகரகுரு அருள்திரு.செங்கன் தேவதாசன் தலைமையில் நடைபெற்ற நன்றிசெலுத்தும் ஆராதனையில் பிரதம விருந்தினராக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மத்திய மறைமாவட்டத் தலைவர் அருள்திரு.ஆசிரி பெரேரா கலந்துக்கொண்டார். நன்றிசெலுத்தும் ஆராதனை கந்தபொல மெதடிஸ்த திருச்சபையின் 104வது ஆண்டுவிழா நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. இவ்விழாவில் 200வது ஆண்டை குறிக்கும் நினைவு படிகம் திறந்து வைக்கப்பட்டது

இதில் சேகர திருப்பணியாளர்கள் ,அருட்சகோதரர் மதியழகன், அருட்சகோதரர்  பரமானந்தன் ஆகியோருடன் சேகர உக்கிராணக்காரர்கள், சேகரசபை மக்கள், மெதடிஸ்த முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள், பொது மக்கள், வர்தக பிரமுகர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--