Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை, பசறை பிரதான வீதியில் நேற்று முன்தினம் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தையின் தாய் நேற்று மாலை பசறை பொலிசாரினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் தாயென சந்தேகிக்கப்படும் குறித்த பெண் 22 வயதுடையவர் எனவும், திருமணமாகாதவரெனவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பெண், ஜா - எல பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரிந்த அவருடன் தொடர்பு கொண்ட இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட உறவின் மூலம் குறித்த குழந்தையை ராகம வைத்தியசாலையில் வைத்து பிறசவித்துள்ளார். பின்னர் குறித்த, குழந்தையை வாடகை வீடொன்றில் வைத்து பராமரித்ததாகவும் பின் தனது பெற்றோரின் வீட்டுக்கு குழந்தையை எடுத்துவர முயற்சித்த போது, பெற்றோர்கள் அதனை விரும்பவில்லை என அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்து பதுளையிலிருந்து ஆட்டோ ஒன்றின் மூலம் குழந்தை எடுத்துச்சென்று குறித்த பதுளை - பசறை பிரதான வீதியில் ஒன்பதாவது மைல்கல் அருகில் அமைந்திருந்த பஸ்தரிப்பு நிலையத்தில் குழந்தையை விட்டுவிட்டு தனது சகோதரி ஒருவரின் வீட்டுக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸார் நேற்று மாலை குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சென்ற குறித்த பெண் குழந்தைக்கு பாலூட்டி ஆரதழுவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பசறை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago