Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை, பொகவான தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப்போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கடந்த 19ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத் தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும், தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத் தொடர்ந்து குறிப்பிட்டத் தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறுக்கோரி பொகவானத் தோட்ட்தைச் சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்படாத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
26 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
1 hours ago