2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மாத்தளையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் மேலதிக பரிசோதனைக்காக இந்தியாவிற்கு அல்லது ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று மாத்தளை சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன தெரிவித்தார்.

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித எலும்புக் கூடுகள் அகற்றும் நடவடிக்கை கடந்த நவமபர் மாதம் 26ஆம் திகதி முதல் 2013 பெப்ரவரி 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.

இக்காலப் பகுதிகளில் 154 மனித எலும்புக் கூடுகளும் 141 மனித மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--