2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் அணிதிரண்டுள்ளனர்

Kogilavani   / 2015 ஜூலை 29 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை நன்கு அறிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அக்கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் எரிக் வீரவர்தன தெரிவித்தார்.

ஹாரிஸ்பத்துவ தொகுதியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்நாட்டு மக்கள் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். ஆனாலும், புதிய அரசு ஒன்றை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இருந்த போதும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்று ஒரு சிறுபான்மை அரசை நடத்தினார். மக்களுக்கு அளித்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என சுட்டிக்காட்டினார்.

'மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து இன மக்களையும் ஒற்றுமையாக வாழ வழி வகுத்து தந்தார். இவ்வாறான ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு மக்கள் திரண்டு வந்துள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .