Editorial / 2018 செப்டெம்பர் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளைப் பகுதியில், உணவு ஒவ்வாமைக் காரணமாகப் பாதிக்கப்பட்ட 65 சிறுவர்கள், நேற்று (5) இரவு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவு, டெம்பல்ஸ்டோ தோட்டத்திலுள்ள வணக்கஸ்தலமொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களே இவ்வாறுப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக, நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி வணக்கஸ்தலத்தினால், சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டுள்ளதெனவும் இரவு உணவை உட்கொண்ட 160 சிறுவர்களில் 60 பேரே, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
60 பேரும், வாந்தி, வயிற்றோட்டம், தலைச்சுற்று மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025