2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கடலில் மூழ்கி சிறுவன் பலி

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். இஸட். ஷாஜஹான் 

நண்பனுடன் ஏத்துக்கால் கடலில் நீராடச் சென்ற 10 வயதுச் சிறுவன் ஒருவன், நேற்று திங்கட்கிழமை (07) நீரில் மூழ்கி பலியாகியுள்ளான். 

நீர்கொழும்பு, தளுவகொட்டுவ சாந்த ஹானா வித்தியாலயத்தில் தரம்  05இல் கல்வி கற்கும் ஏத்கால தேக்கவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த யசோத் உதயங்க பீரிஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழிந்த சிறுவனும் நீர்கொழும்பு லொயலா கல்லூரியில் தரம் 06இல் கல்வி கற்கும் அவனது நண்பனான 10 வயதுச் சிறுவன் ஒருவனும் சம்பவத்தன்று கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். 

இருவரும் 'ரிஜிபோர்ம் ஒன்றினைப் பயன்படுத்தி கடலில் குளித்துள்ளனர். இதன்போது இருவரும் திடீரென்று கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

உயிர் தப்பிய சிறுவன், இதன்போது கூக்குரலிட்டதையடுத்து அங்கிருந்த வெளிநாட்டவர் ஒருவரால் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். 

மற்றைய சிறுவனின் சடலம், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .