2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

களஞ்சியசாலைக்கு விஜயம்

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்வி அமைச்சுக்கான கலஞ்சியசாலையை பார்வையிடுவதற்காக மீரிகம பத்தலகெதர, கொழும்பு ஒருகொடவத்த களஞ்சியசாலைகளுக்கு இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷணன்  விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவகேவிதான, பிரத்தியேக செயலாளர் ஆர்.திவாகரன், நாடாளுமன்ற இணைப்பு செயலாளர் எம்.ரவிந்தின், ஊடக செயலாளர் எஸ்.தியாகு உட்பட பலரும் செனன்றிருந்தனர்.

இதன்போது களஞ்சியசாலை மிகவும் நவீன முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்ககைளும் கலஞ்சியசாலையில் உள்ள பொருட்களை மாணவர்களுக்கு உரிய பாவனைக்கு பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு பாரிய அளவிலான பாடசாலைகளுக்கு தேவையான  கணினிகள், சீருடைகள், விஞ்ஞான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், போன்ற இன்னோரன்ன பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .