2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத சிகரெட்கள் கைப்பற்று; ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

தளுபத்தைப் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,500 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்களை, நேற்றுப் பிற்பகல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார், கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்களின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமானதாகுமென, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .