2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டக் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அவுஸ்திரேலிய பழங்குடியினரின் போராட்டம் - படிப்பினைகள்' என்ற தலைப்பில் இன்று வியாழக்கிழமை (17) மாலை 6:30க்கு, இல. 121, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், கலந்துரையாடவுள்ளது.

இலங்கைத் தீவில் சிங்களவர்கள் இறையாண்மை பற்றிப் பேசுகிறார்கள். தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். பழங்குடிகளின் போராட்டத்தினை விளங்கிக்கொள்வதன் மூலம் இவை இரண்டும் எவ்வாறு ஒன்றர கலந்தவை என்பது பற்றியும் எமது விடுதலை அரசியலின் குறைகள் பற்றியும் அறியமுடியும். 

அவுஸ்திரேலிய பழங்குடிகளின் போராட்டங்களில் பங்கெடுத்த ஷிரான் இல்லன்பெரும கலந்துரையாடலைத் தொடக்கிவைத்து தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்ளவுள்ளார்.

எம்மைச் சூழ நிகழும் நடப்புக்களை ஆழமாகக் கற்றுக்கொள்வதன் மூலம் சமூக மாற்றத்துக்கான அடித்தளத்தை இடும் நோக்குடன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கூடும் திறந்த கலந்துரையாடற் களமான சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்துகொண்டு உரையாடித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியச் செயலாளர் மு. மயூரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .