2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்கள் முதியோரை அழைத்துவரத் தடை

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ராகம  வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைப் பார்வையிட வருபவர்கள்,  சிறுவர்களையும் முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வரவேண்டாமென, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவிவருவதையடுத்து, கம்பஹா மாவட்ட  வைத்தியசாலை  நிர்வாகம்  இந்த அறிவிப்பை  விடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளில்  தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயார்கயைப் பார்வையிட வருவோர், 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களையும்  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அவசியமின்றி அழைத்து வர வேண்டாமென  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகள்  உள்ளிட்ட மத்ரஸா மாணவர்களுக்கும், மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .