2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சுங்கத் திணைக்கள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரிந்துரை குழு

Gavitha   / 2016 மார்ச் 10 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுங்கத் திணைக்களம், அதனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்காக விசேட பரிந்துரைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்கள தொழிற்சங்க பிரதிநிதிகளை, நேற்று புதன்கிழமை (09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்த தொழிற்சங்க பிரதிநிதிகளிடம், இது தொடர்பான அறிக்கையொன்றை தன்னிடம் விரைவில் சமர்ப்பிக்குமாறு இதன்போது உத்தரவிட்டார்.

அத்தோடு அப்பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் வழங்குவதாக ஜனாதிபதி கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--