2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸ் பரிசளிப்பு விழா

Princiya Dixci   / 2017 மே 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்

பேருவளை சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸ் பரிசளிப்பு விழா, சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில், சனிக்கிழமை (20) நடைபெற்றது.

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் உள்ள 12 குர்ஆன் மத்ரஸாக்களில் குர்ஆனை முழுமையாக ஓதி பரீட்சை எழுதி சித்தியடைந்த சிறார்களுக்கு, இந் நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சீனன் கோட்டை பள்ளிச் சங்க பிரதித் தலைவர் எம்.எஸ்.எம். துகைன், உப தலைவர் ஏ.ஆர்.எம். ஸூலைமான், இனணச் செயலாளர்களான எம்.எம்.எம். ஷிஹாப், அரூஸ் அனஸ், உறுப்பினர் ஹில்மி மவ்ஸூன், குர்ஆன் மதாரிஸ் சார்பில் கலீபதுஷ் ஷாதுலி எம்.ஐ.எம். ரபீப் (பஹ்ஜி), மௌலவி ஏ.டப்.எம். பஹ்ரி (மிஸ்பாஹி) உற்பட 12 குர்ஆன் மத்ரஸாக்களின் அதிபர்கள், முஅல்லிம்கள், பெற்றோர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

குர்ஆன் மத்ரஸா சிறார்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .