2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மகளிரை வலுவூட்டுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்: பிரதமர்

Kogilavani   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்தின் சிறப்பான இருப்புக்கும் முன்னோக்கியப் பயணத்துக்கும் தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணம் செய்து, பெண்ணானவள் வழங்கும் பங்களிப்பை நாம் மிகவும் மதிக்கவேண்டும். பெண்ணுக்குரிய கௌரவம், பாதுகாப்பு, மதிப்பீடு மற்றும் அன்பை வழங்கி, அவளை முன்னேற்றகரமான சமூகப் பயணத்தின் பங்காளியாக சேர்த்துக் கொள்வது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகளிர் வாழ்த்துச் செய்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'சிறந்த சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்காக ஆண்,பெண் பால் சமநிலையை வலுவூட்டுதல் மற்றும் அவர்களைப் பங்காளர்களாக ஆக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக சமூகம் என்ற வகையில்  கவனஞ் செலுத்தப்பட வேண்டும். அதன் மூலம் மிகச்சிறந்த பணியை ஆற்றுவதற்காக மகளிரை ஊக்குவித்தல் மற்றும் வலுவூட்டுவதற்குப் பொருத்தமான நிலையானதொரு சூழலை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.

சர்வதேச மகளிர் தினத்தை நினைவுக் கூறும் வகையில், மகளிர் விவகார அமைச்சினால் 'பலம்மிக்கதோர் பெண் - நிலையான எதிர்காலம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதே சமகளிர் தினம் கொண்டாடப்படுகின்றமை அந்த சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் வகையிலாகும்.

விசேடமாக பெண்கள், மிகவும் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் சுதந்திரமான மனநிலையுடன் வாழக் கூடியதொரு சமூக, பொருளாதார சூழலை உருவாக்கிக் கொடுப்பது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

தமது அறிவு, மனப்பாங்கு, திறன்களை செழுமைப்படுத்திக் கொண்ட நிலையில், அப்பணியில் தாமும் பங்காளராகுவதற்கு அனைத்து இலங்கை மகளிருக்கும் இயலுமாக அமையட்டும் எனப் பிரார்த்திப்பதுடன், சர்வதேச மகளிர் தினம் சிறப்பானதாக அமைய எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--