2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் நால்வர் சிக்கினர்

Princiya Dixci   / 2016 ஜூலை 14 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புச் சம்பவத்தின் போது, பெஹலியகொடை வடக்குப் பகுதியில் 36 கிராம் ஹெரோய்ன் போதைபொருளினை, புதன்கிழமை (13) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், 46, 24, 25  வயதான பெஹலியகொடை, களனிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

மிரிஹானைப் பகுதியில் வைத்து 24 வயதான சந்தேகநபரொருவரிடம் இருந்து 2 கிராம் 50 மில்லிகிராம் எடைகொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர், ராஜகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நான்கு சந்தேகநபர்களிடமும் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .