Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
இன்று ஊடகங்கள் எங்கள் மீது சேறு பூசுவதுடன் எம்மை கேலி செய்து சித்திரங்கள் வரைகின்றனர், செய்திகள் எழுதுகின்ன்றனர். அத்துடன் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்துக்குப் பயப்படுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இன்று களனியில் நடைபெற்ற கட்சியின் புனர் நிர்மாணக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய அவர், "யுத்தத்தை வெற்றி கொண்ட சரத் பொன்சேகா இன்று சிறையில் இராணுவப் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இவர் செய்த குற்றம் என்ன? யுத்த வெற்றியின் போது வீரர்கள் என அவரைப் போற்றியவர்கள் இன்று எங்கே?
ஏன் இன்று இது தொடர்பில் அனைத்து அமைப்புகளும் சங்கங்களும் மௌனம் சாதிக்கின்றன? ஏன் ஊடகங்கள் இவை பற்றி பேசுவதில்லை. இதுதான் இந்நாட்டின் ஜனநாயகமா?" என்றார் அவர்
ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பெவன் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் மாகாண சபை, நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026