2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ரிஸானாவின் விடுதலைக்காக நீதிபதி கபூர் தலைமையில் கையெழுத்து வேட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எச்.எம்.பௌஸான்)

சவூதி அரேபியாவில் குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக் 17 எனும் யுவதியை விடுதலை செய்யக் கோரும் மகஜரில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை மல்வானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகஜரில் கையெழுத்திடுவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கையெழுத்திட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேல் நீதிமனற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் தலைமையில் இக்கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

இது தொடர்பாக நீதிபதி கபூர் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இவரது விடுதலை தொடர்பாக  பலதரப்பட்டவர்களும் குறிப்பாக ஜனாதிபதியும் கூட சவூதி அரேபிய மன்னருக்கு அறிவித்துள்ள போதும்  கருணையுள்ளம் படைத்தவர்கள் என்ற வகையில் நாமும் இதனை ஏற்பாடு செய்தோம் எனவும் இம்மகஜர் விரைவில் சவூதி அரேபிய மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .