2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சட்டமா அதிபர் மொஹான் பீரிஸின் நியமனத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

மொஹான் பீரிஸ் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டமை மற்றும் அரசியலமைப்பு சபையை நியமிக்காமை ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட உரிமைகள் மனு மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

மொஹான் பீரிஸ் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கத் தவறிய நடவடிக்கைகள் தொடர்பில் வழக்கு தொடர முடியாது எனவும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்தும் மன்றில் கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், அரசியலமைப்பு சபை தற்போது அற்றுப்போய்விட்டது எனவும் 18ஆம் திருத்தத்தின்படி அதற்குப் பதிலாக நாடாளுமன்றக் குழு வந்துவிட்டது எனவும் இதனால் இந்த வழக்கு செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தனர்.

இவர்களது வாதங்களை மனுதாரர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் மறுத்து வாதிட்டார். இந்நிலையில் குறித்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கும் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--