Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 11 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகரசபை, கல்கிசை- தெஹிவளை மாநகரசபை, கோட்டே மாநகரசபை உட்பட மேலும் பல உள்ளுராட்சி சபைகளை அதிகார சபையாக மாற்றுவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையான அங்குள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் எதேச்சதிகார நடவடிக்கையாகும் " என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைக்கு எதிராக ஐ.தே.க சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக சி.வை.பி. ராம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒரு போதும் துணை போகக்கூடாது.
கொழும்பு, கல்கிசை, தெஹிவளை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே பெருமளவிலான வரியிறுப்பாளர்கள் உள்ளனர். இதனால் வருடந்தோறும் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபா வருமானம் கிடைக்கிறது.
அதே நேரம் மாநகரசபை, நகர சபைகளை அதிகார சபையாக மாற்றுவதன் மூலம் வீண் விரயம், ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றுக்கு வழிவகுக்கப்படுவதுடன் ஜனநாயக நிர்வாக செயற்பாட்டுக்கு குந்தகமாக அமையும்.
மக்களின் வாக்களிக்கும் உரிமை, ஜனநாயக நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பெரும் பாதகமாக அமையவுள்ள இத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.
8 minute ago
28 minute ago
53 minute ago
55 minute ago
N. Sivanandan Thursday, 13 January 2011 12:03 AM
சரியான யோசனை. எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
53 minute ago
55 minute ago