2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ரயில்வே பொது முகாமையாளருக்கு எதிரான விசாரணையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகரவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் திணைக்கள ஆணையாளரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்குக்கு எதிராக பி.பி.விஜேசேகரவினால் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து பி.பி.விஜேசேகரவுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவானுக்கு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை கட்டளை பிறப்பித்தது.

இதனை தாம் எதிர்க்கப்பொவதில்லை என பிரதி சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு தெரிவித்ததோடு, தான் விஜயசேகர மீது நீதிவான் நீதிமன்றில் சாட்டப்பட்ட குற்றங்களை மீளப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--