2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்த்திகாயினி சுபேஸ் எழுதிய'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

டாக்டர் எம்.கே.முருகானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் நூல் வெளியீட்டுரையினை மூத்த எழுத்தாளார் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தவுள்ளார்.  நூலின் முதற்பிரதியை தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி. சாமி வெளியிட்டு வைக்க, சட்டத்தரணி,கே.எம்.தர்மராஜா பிரசித்த நொத்தரிஸ் பெற்றுக் கொள்வார்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர். தி.ஞானசேகரன் மற்றும் திருமதி.புஸ்பராணி நவரட்ணம் ஆகியோர் வாழ்த்துரையினை நிகழ்த்தவுள்ளதுடன் ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.தேவகௌரி சுரேந்திரன் , எழுத்தாளர் மு.தயாபரன்  ஆகியோர் ஆய்வுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.

நிகழ்ச்சியினை புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் தொகுத்து வழங்குவார். மீரா பதிப்பகத்தின் 91ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--