2021 மே 08, சனிக்கிழமை

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக கலாநிதி ஹஜர்ஜான் மன்சுர் நியமனம்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹஜர்ஜான் மன்சுர் இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பெடுத்துள்ளார்.

பாகிஸ்தான், இஸ்லாமபாத் நகரிலுள்ள சார்க் மனித வள நிலையத்தின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய இவர், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கவே முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண் புத்திஜீவிகளில் கலாநிதி ஹஜர்ஜான் மன்சுரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X