Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கு, கிழக்கு மக்கள் காணும் அபிவிருத்திகளைக் கூட கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாழும் மக்கள் காணாமல் இருப்பதென்பது இம்மக்களின் எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்இ அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த அபிவிருத்திகளை இங்கும் கொண்டுவருவதற்கான தலைவாசலை மாநகரசபைத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளதால்இ வெற்றிலையின் வெற்றியை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட்டின் தேர்தல் அலுவலகமொன்று கிராண்ட்பாஸ் அவ்வல் சாவியா வீதியில் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'இந்த நாட்டின் உள்ளளூராட்சி மன்றங்களின் ஆட்சிகளை நீண்டகாலம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி எந்த அபிவிருத்தி திட்டங்களையும் மக்களுக்கு கொடுத்த்தில்லை. குறிப்பாக கொழும்பில் 50 வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சி மாநகர சபையின் நிர்வாகத்தினை கொண்டிருந்தது.
துரதிஷ்டம் தொடர்ந்தும் மக்கள் இருளில் தான் இருக்கின்றனர். உரிய பொது வசதிகள் இல்லை. மக்கள் குடியிறருப்புக்களில் நீர் வடிகாலமைப்பு, கழிவு நீர் வழிந்தோடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறான பணிகளைக்கூட செய்ய முடியாத கட்சிகளுக்கு மீண்டும் நீங்கள் வாக்களிப்பீர்களாக இருந்தால் இது தான் தலைவிதியாகும். அதனை நீங்கள் மாற்றாதவரை இறைவன் மாற்றத்தை தரப்போவதில்லை.
நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆட்சி மாற்றத்துக்கு மிகவும் முக்கியமானவர்களாக இருந்து வருபவர்கள் கொழும்பு மாநகர மக்கள். அந்த தேர்தலில் சர்வதேசத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லப்பொகின்றவர்களும் நீங்களே. ஜனாதிபதி தலைமையிலான கட்சியின் வெற்றிக்கு சான்றாக இங்கு வருகை தந்திருக்கும் மக்கள் இருப்பார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இப்பகுதி படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு, குடியிருப்புக்களின் மேம்பாடு, சுகாதார வசதிகள், உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்ப்பதற்கு தெற்கிலும், நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகின்றனர்.
இந்த சூழ்நிலை இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் இருந்ததா? கொழும்பில் வாழும் எமது மக்கள் எவ்வளவு அச்சத்துடன் வாழ்ந்தனர். இந்த கூட்டம் இடம்பெறும் பகுதியிலும் குண்டு வெடித்த சம்பவம் உள்ளது. கடந்த 30 வருடம் காணப்பட்ட பயங்கரவாதம் இன்று இல்லை. சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் எமது கொழும்பு வாழ் மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டுவரும் காலமாக மாறியுள்ளது.
இன்று யுத்தம் இடம்பெற்ற போது, ஜனாதிபதிக்கு எதிராக போரட்டங்களை நடத்தி தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட கட்சிகள் இன்று எமது ஜனாதிபதி தான் சிறந்த தலைவர் என எக்களம் இடுகின்றனர்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்த நாட்டில் சமாதானத்தையும்இ ஆட்சியின் முக்கிய பங்காளியாகவும் இருந்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி இருக்குமெனில் அது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தான் எனபதை யாவரும் அறிவார்கள்.
இன்றும் எமது சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களை முறியடிக்க அரசாங்கத்துடன் ஜனாதிபதியுடன் அமைச்சர்களுடன் தரப்புக்களுடன் பேசுவதற்கான அங்கீகாரத்தை எமது நாட்டு மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சுப் பதவி, பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சர், நகர, பிரதேச சபைகளின் அதிகாரம் என எமது கட்சிக்கு கிடைத்துள்ளது. அது மக்களின் அமானிதமாகும். அதனை அல்லாவுக்கு பயந்து எந்த சமூகத்துக்கு அநியாயம் இடம்பெறாத வண்ணம் பயன்படுத்தி வருகின்றோம்.
இனியும் நாம் தாமதிக்க முடியாது. அவ்வாறு தாமதித்தால் நாமே நஷ்டவாளிகளாக மாறிவிடுவோம். எமது வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி சஹீட் சிறந்த கல்விமான். சமூகத்துக்காக பாடுபடக் கூடியவர். அவரது வெற்றிக்கு முன்னால் எமது பதவிகள் இருக்கின்றன. அதனூடாக இப்போதிலிருந்தே நாம் எமது பணிகளை மக்களுக்கு ஆற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்' என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago