Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
கொலன்னாவை பிரதேசத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த உத்தரவை பொலிஸார் நிராகரித்தாகவும் இது தேர்தல் தினத்தன்று வருந்தத்தக்க சம்பவங்கள் ஏற்பட வழிவகுத்ததாகவும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) தெரிவித்துள்ளது.
கொலன்னாவை பகுதியில் பதற்றம் அதிகரிப்பதாக பல புகார்கள் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பணித்திருந்தாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.
கடுல்ல, வதுல்வத்த, ஜனசபா, களனிபுர மற்றும் கம்பிகொட்டுவ உட்பட பல பகுதிகளின் வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முறையற்ற அழுத்தங்களை பிரயோகித்தாகவும் தேர்தல்கள் ஆணையாளரால் அனுப்பப்பட்ட அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாக்குகளை எண்ணுதற்கு முன்னர் இவ்வியடத்தை கருத்திற்கொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அதிகாரியை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பணித்திருந்தார்.
இந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டிருந்தால் முல்லேரியா சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கீர்த்தி தென்னகோன் கூறினார்.
5 minute ago
15 minute ago
5 hours ago
asker Saturday, 15 October 2011 06:21 PM
போன பஸ்ஸுக்கு கை கட்ட வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
5 hours ago