2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி ஏமாற்றிய பெண் கைது

Super User   / 2011 நவம்பர் 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

மத்திய கிழக்கிலும் சைப்பிரஸிலும் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவாக உறுதியளித்து,  பல இளைஞர்களிடம் பல மில்லியன் ரூபா பணத்தை பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சைப்பிரஸில் வசிக்கும் இப்பெண் இலங்கைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.

இந்த பெண்ணால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களிடமிருந்து 10 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

 


  Comments - 0

  • jambavan Wednesday, 16 November 2011 05:24 AM

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ?.........குற்றம் நிரூபிக்கபட்டால் பாதிக்கபட்டவர்களின் பணம் திரும்ப பெறவேண்டும் .. ஆயுள்காலம் சிறையில் இடவும் வேண்டும் .. எத்தனை ஏழைகளின் வாழ்வு நாசமாகியது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X