2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சிறுமிகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் மகளிர் விடுதி அதிகாரிகள் கைது

Super User   / 2011 நவம்பர் 23 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

வழக்குகளின் சந்தேக நபர்களான சிறுமிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்க வைக்கப்படும் விடுதியிலுள்ள சிறுமிகளை துன்புறுத்தியமை தொடர்பாக, விடுதி நிர்வாகி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்விடுதியிலிருந்து 9 சிறுமிகள் ஒக்டோபர் 19 ஆம் திகதி தப்பியோடிய நிலையில் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இச்சிறுமிகளை பொலிஸார் விசாரித்தபோது தாம் விடுதி அதிகாரிகளால் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் இச்சிறுமிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து விடுதியின் அதிபர் சுகந்திகா விஜேரட்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு மினுவாங்க அதன் பின்னர் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு கொழும்பிலிருந்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
 


  Comments - 0

  • ameerudeen Wednesday, 23 November 2011 10:22 PM

    எங்கு பார்த்தாலும் வன்முறை, அடக்குமுறை . மனிதனை வாழ விடுங்கப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .