2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஒருகொடவத்தையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நீர்கொழும்பில் விடுவிப்பு

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( கே .என். முனாஷா )

கொழும்பு, ஒருகொடவத்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 42 வயதான லலித் குமார எனும் இவ்வத்தகரே நேற்றிரவு 11.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாயக்கிழமை அதிகாலை 5.45 அளவில் இனந்தெரியாத நால்வரால் இந்த வர்த்தகர் ஒருகொடவத்த பகுதியில் கடத்தப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லலித் குமாரவிடம் கிரேண்ட்பாஸ் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தகர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தெமட்டகொட சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .