2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

பிணை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


( கே.என்.முனாஷா)


சட்டவிரோதமான அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல் பல மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உறவினர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நீர்கொழும்பு பிரதான வீதியல் அமைந்துள்ள சென் மேரிஸ் தேவாலயத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது மகஜர் ஒன்றிலும் கையெழுத்திட்டனர். இந்த மகஜர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கர்தினால் வண. மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்படவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .