2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பளிங்கு கற்களை சென்னைக்கு கடத்த முயன்றவர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிய வகை பளிங்குக் கற்களை இந்தியாவுக்கு கடத்தில் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுமார் 20 கிலோகிராம் நிறையுடைய மேற்படி பளிங்குக் கற்கள் மூலம் ஆபரணங்கள் தயாரிக்கவே அவற்றை இந்தியாவுக்கு கடத்தில் செல்ல முற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு செல்வதற்காக விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக அவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .