2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

விடுமுறைக்காக இலங்கை வந்து மீண்டும் இத்தாலி செல்ல இருந்த குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மரணமாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு, தவட்டகவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு - கிம்புலாபிட்டிய கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த மதுராவலகே தொன் கிங்ஸ்லி சமிந்த அப்புகாமி என்ற 37 வயதுடைய குடும்பஸ்த்தரே சம்பவத்தில் பலியானவராவார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கில் ஆடிஅம்பலம பிரதேசத்திலிருந்து கிம்புலாபிட்டிய திசையை நோக்கி வரும் போது, எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மற்றையவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் இத்தாலியிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து மீண்டும் நேற்று இத்தாலி செல்ல இருந்த போதே விபத்துக்குள்ளாகி மரணமானதாக விசாரணைகளின் போது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .