2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வீடுகளில் கொள்ளளையிட்டு வந்த மூவர் கைது

Super User   / 2013 ஜனவரி 02 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


வீடுகளில் கொள்ளையிட்டு வந்த பிரபல குற்றவாளி ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் காரியாலத்தை சேர்ந்த  பொலிஸ் சார்ஜன்ட் சுதத் குணவர்தன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 20 வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற பிணையில் இருப்பவர் எனவும் இவர் போதைப்பொருள் பாவனை சூதாட்டம் என்பவற்றுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபர் தனக்கு உதவியாக இரண்டு இளைஞர்களை பயிற்றுவித்து திருட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தியுள்ளார் .இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் தங்கொட்டுவ, கட்டுகெம்ப பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.  இவர்கள் தங்கொட்டுவ, குளியாபிட்டிய, வென்னப்புவ மற்றும் கொச்சிக்கடை உட்பட பல பிரதேசங்களிலும் உள்ள வீடுகளில் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, தொலைக்காட்சி பெட்டி, டிவிடி இயந்திரம், கையடக்க தொலைபேசிகள் உட்பட பல பொருட்களை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் சுதத் குணவர்தன தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .