2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பிரபா எம்.பி.யின் பிறந்ததினத்தையொட்டி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் பிறந்ததினமான இன்று வெள்ளிக்கிழமை எவ்வித கொண்டாட்டங்களுமின்றி ஆயிரம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதற்காக தனது சொந்த நிதியை அவர் ஒதுக்கியுள்ளதாக முன்னால் மாநகரசபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான என்.ரவிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பிறந்ததின கொண்டாட்டங்களுக்கு செலவிடப்படும் பணம் வீண்விரயம் என்பதாலும் பிரபா கணேசன் எம்.பி. தமிழ் மக்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாலும் இந்தமுறை ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான அப்பியாசக் கொப்பிகளை  வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார். இதேபோல் எதிர்வரும் காலங்களில் மேலும் உற்சாகத்துடன் மலையகம் உட்பட நாட்டில் வாழும் அனைத்து தமிழ் மாணவ, மாணவிகளின் கல்விப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக பிறந்ததினத்தில் உறுதிகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0

  • Kanavaan Friday, 04 January 2013 01:37 PM

    பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்குமான நல்லதோர் எடுத்துக்காட்டல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X