2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கொழும்பில் உலக உச்சி மாநாட்டு விருது வழங்கல் நிகழ்வு

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக உச்சி மாநாட்டு விருது வழங்கல் நிகழ்வுகள் நாளை புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மஹிறந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் பிரதான பங்காளியாக இந்த மாநாட்டை ஏற்று நடத்துகின்றது. உலகில் தலைசிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்ளடக்கங்களை இனங்கண்டு அவற்றுக்கு உலகத் தரம்வாய்ந்த ஏற்புடைமையை வழங்குவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

உலக உச்சிமாநாட்டு விருது வழங்கல் இலங்கையில் இடம்பெறுவது அண்மைக்காலமாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் தவகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்றிட்டங்களின் துரிதத்தன்மைக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாநாடு குறித்து இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலயத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவபுர கருத்துத் தெரவிக்கையில்,

"இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முன்னேற்றம் கருதி தகவல் தொழில்நுட்பத்தை மிகவும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான உற்சாகத்தை வழங்குவதற்கும் இந்த மாநாடு அதிகளவில் துணைபுரியும்" என்றார்.

உலகில் தலைசிறந்த தகவல் தொடர்பாடல் செயற்றிட்டங்கள் மாத்திரமன்றி தகவல் தொழில்நுட்பப் பிரயோகங்களும் இதன்போது அங்கீகரிக்கப்படவுள்ளன. குறிப்பாக இ-கற்கை மற்றும் இ-விஞ்ஞானம், இ-பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுக்கள், இ-கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை, இ-ஊடகம் , இ-வர்த்தகம் மற்றும் வியாபாரம், இ-உள்ளடக்கம், மற்றும்; வலுவாக்கம் ஆகியன விருதுகளுக்காக தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--