2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு சத்தியப்பிரமாணம் செய்ய அனுமதி

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இஸட்.ஷாஜஹான்

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மேல் மாகாணசபைக்காக தெரிவாகியுள்ள ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோ, மாகாணசபை உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்ய நீர்கொழுப்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீர்கொழுப்பிலுள்ள நகை கடையொன்றில் கடந்த பெப்ரவரி மாதம் இடப்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ரொயிஸ் விஜித்த பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கபப்பட்டுள்ள நிலையிலேயே அவர் சத்தியபிரமாணம் செய்வதற்கு நீர்கொழுப்பு நீதவான் நீதிமன்றம்; ஏ.என்.எம்.பி. அமரசிங்க செவ்வாய்க்கிழமை (8) அனுமதி அளித்துள்ளார்.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சாரபில்; மேல் மாகாண சபையில் கம்பஹா மாவட்டத்தில்  போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்றுகொண்டவர்.

இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவருமாவார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி மேல் மாகாண சபையின் முதலாவது அமர்வின் போது மேல் மாகாண ஆளுனர் முன்னிலையில் இடம்பெறவுள்ள சத்தியப்பிரமாண நிகழ்விலேயே ரொயிஸ் விஜித்த பெர்னாந்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் செயற்குழு செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான பெஞ்சமின் கிஹான் பெர்னாந்து தெரிவித்தார்.

வெற்றிபெற்ற மாகாண சபை உறுப்பினர்களின் கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற அனுமதியின்மை காரணமாக ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவினால் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--