2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் உழைப்பேன்

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.அஷ்ரப்கான்


கடந்த மாகாண சபைத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதி ஒருவரினால் எனது வெற்றி தடைப்பட்டது என்று முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் பைஸான் நைஸர் தெரிவித்துள்ளார்.

என்றாலும் மக்களுக்காக நான் பொறுமையோடு தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் அதன் தலைமைத்துவம் மாத்திரம் அக்கறையோடு செயற்பட்டால் போதாது. கட்சியின் இருப்பை பாதுகாக்கும் பணி அக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என சகல அரசியல்வாதிகளுக்கும் உண்டு. இதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

தேர்தல் வரும்போது மட்டும் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வெளியில் வரும் நாம,; தேர்தல் முடிந்த கையோடு பெட்டிப் பாம்புகளாய் அடங்கிப்போய் விடுகிறோம். மக்கள் நலன் என்ற விடயத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதிகள் அலட்சியமாக இருக்கின்றோம். இதனால்தான் இன்று எமது கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கின்றனர்.

மேலும்  முஸ்லிம் தலைமைகளைக் கொண்ட  மாற்றுக்கட்சிக்காரர்களும்; துரோகங்களை செய்து எமது கட்சியை காட்டிக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளாது, அரசியல் ரீதியாக துரோகங்களைச் செய்யாது செயற்படப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆளும் தரப்பில் இருந்து வந்த என்னால் எமது களுத்துரைப் பிரதேசத்தை ஒரு நிலைப்படுத்த முடியுமென்றால் ஏன் முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்ப காலப் பேராளிகள் இங்கு கட்சியின் வளர்ச்சியில் பங்கெடுக்க முடியாது. இம்முறை மாகாண சபைத் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்க வேண்டுமென்று  எனது நண்பர்களும், உறவினர்களும், ஊர்வாசிகளும், கட்சிப் பேராளிகளும் என்னோடு இணைந்து செயற்படுகின்ற போது சில அரசியல் வாதிகள் எனது வெற்றிக்கு தடையாக இருந்தனர்.

என்றாலும் கடந்த கால அரசியல் அனுபவத்தைக் கொண்டு மீண்டும் தொடர்ந்து களுத்துறை மாவட்ட மக்களுக்கு என்னால் சேவை செய்ய முடியும். அதனால் முழு இலங்கையிலும் வாழ்கின்ற முஸ்லீம்கள் மட்டுமல்லாது எல்லா இன மக்களையும் அரவணைத்து செல்கின்ற பாரிய வேலைத்திட்டத்தை களுத்துறையிலிருந்து நான் ஆரம்பிக்க இருக்கின்றேன்.

இந்தப் பாரிய பணியில் சகல முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். வெறுமனே  நான் மட்டும் பல்வேறு துரோகங்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக செயற்பட்டு வெற்றிகான முடியாது. கடந்த தேர்தல் முடிவுகளின்படி களுத்துறையில் இன்னும் சிறு தொகை வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தால் இப் பிரதேசத்தில் எமது கட்சியும் ஓர் ஆசனத்தைப் பெற்றிருக்கும். தனிப்பட்ட குரோதங்களுக்காக கட்சியின் வளர்ச்சியில் மண் போடலாமா? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

தற்போது தேர்தல் முடிந்த கையோடு ஆளும் கட்சியினர் மீண்டும் என்னை  ஆளும் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர். ஆனால் நான் எனக்கு வாக்களித்த மக்களை புறம் தள்ளிவிட்டு எங்கும் செல்ல மாட்டேன். இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எனக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து கௌரவிக்கின்றார்களோ அந்தளவு நானும் கட்சிக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றேன். இது எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் செய்யும் பிரதியுபகாரமாகும்.

நான் எதிர்பார்த்ததை விட இம்முறை தேர்தலில் களுத்துறை, பேருவளை, வெலிப்பன்ன (மத்துகம தொகுதி), அட்டுளுகம, பாணந்துறை போன்ற பகுதிகளிளும் மற்றும்  தமிழர்களின் வாக்குகளும் கணிசமாக எனக்கு கிடைத்தது. இதனால் நான் மக்களுக்காக சேவை செய்வதில் பின் நிற்கப் போவதில்லை.

எனவே தேர்தல் கால ஹீரேக்களாக நாம் இருப்பதை விட்டு விட்டு சர்வதேசம் தொட்டு முழு இலங்கையிலும் அனைத்து முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்கின்ற கட்சியாக எமது கட்சியை பலப்படுத்த வேற்றுமைகளையும் கட்சிக்குள் இருக்கின்ற குழு மோதல்களையும் தவிர்த்து ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பேராளிகளாக முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலாக மாறுவதற்;கு அனைவரும் ஒன்றுபடுவதற்;கான அழைப்பை விடுக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X