2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மதுபான நிலையத்தில் திருடிய இருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்றின் பூடை உடைத்து திருடியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஊமை என்றும் அவ்விருவரிடமிருந்தும் 21 ஆயிரம் ரூபாவை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே  இடம்பெற்றுள்ளது. தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்தே அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையமானது முகத்தை மூடிக்கொண்டு  ஹெல்மட் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளினால் அண்மையில் கொள்ளையிடப்பட்ட புஷ்பா ஜுவலரியிலிருந்து   50 மீற்றர் தூரத்தில் உள்ளது.

இந்த மதுபான விற்பனை நிலையம் நீர்கொழும்பைச்  சேர்ந்த பிரதியமைச்சர ஒருவரின் சகோதரருடையது என்பதுடன் நீர்கொழும்பு, புஷ்பா ஜுவலரியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தையடுத்து நகரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--