2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடு இறக்குமதிக்கு விரைவில் தடை: மைத்திரி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாக கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

'ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி' என்ற கருப்பொருளின் கீழ் நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற மட்பாண்ட மற்றும் கண்ணாடி கைத்தொழிலாளர்களது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவுள்ள எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்குத் தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது பல முன்மொழிவுகளை முன்வைத்தபோதும் உயர்மட்டத்தில் அதற்கு ஆதரவு கிடைக்காமையினால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் போனது என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 

எனினும், எமது நாட்டில் உற்பத்திசெய்ய முடியுமானவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருபவர்களை மகிழ்விக்கும்வகையில் தீpர்மானங்களை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தெளிவான ஒரு தேசியக் கொள்கையின் அடிப்படையில் தேசிய கைத்தொழிலைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமாகவிருந்தும் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்து கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து தேசிய உற்பத்தியாளர்களைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில், உயர் தரத்துடனான உற்பத்திகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து தமது கடமையை நிறைவேற்ற வேண்டியது தேசிய உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா அவர்கள் உட்பட மேலும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .