2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

திருப்பி அனுப்பப்பட்ட 26 பேருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது  அந்தமான் தீவில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் இலங்கைக்கு  திருப்பியனுப்பப்பட்ட 26 பேரில்  20 பேரை ஒரு கோடி ரூபா பெறுமதியான  சரீரப் பிணையில் நீர்கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஐ.எம்.பண்டார விடுதலை செய்துள்ளார்.

இச்சந்தேக நபர்களை  வெள்ளிக்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் விடுதலை செய்துள்ளார்.

இதன்போது பெரியவர்கள் 20 பேரையும் தலா 500,000 ரூபா பெறுமதியான  சரீரப் பிணையிலும்  06 சிறுவர்களை பிணையின்றி நீதவான்  விடுதலை செய்துள்ளார்.

படகொன்றில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்தபோது அந்தமான்தீவில் மேற்படி 26 பேரையும் கைதுசெய்த இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர், அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள்  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இவர்கள் வியாழக்கிழமை (03)  திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .