Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே .என். முனாஷா)
நீர்கொழும்பு, தளுபத்தை - பல்லன்சேனை வீதியின் 5ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (24) ஒன்பது மணியளவில் 300,000 ரூபா பெறுமதியான நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு சென்ற போது, இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டின் பின் பக்கமாக மதிலால் ஏறி தப்பிச் செல்வதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் வீட்டுக்குள் வந்த போது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர் வீட்டின் அறையை சென்று பார்த்த போது அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த 30000 ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டதை கண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025