2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

7 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறையும் தண்டப் பணமும்

Super User   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

ஏழு கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஐந்து வருட காலம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையும் 40,000 ரூபா தண்டப் பணமும் விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

அத்துடன் தண்ட தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 12 மாதகால சிறை தண்டனை வழங்கப்படும் என நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் உத்தரவிட்டார்.

குறித்த நபர்  21-5-2011 அன்று வத்தளை, பண்ட் வீதியில் வைத்து ஏழு கிலோ கிராம் கஞ்சாவுடன வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதிவாதிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .