2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

அழகு சாதன பொருட்கள் கொள்வனவாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதியாளர் விநியோகஸ்தர் தயாரிப்பாளர் போன்றோரின் விவரம் குறிக்கப்படாத வர்த்தக குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்படும் அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு, நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை கேட்டுகொண்டுள்ளது.

 

ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான சட்ட விதிகளை விரைவாக தயாரிக்குமாறும் சந்தையில் சோதனைகளை நடத்துமாறும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பாக அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக செயற்பட்டதன் மூலம், இவ்வாறான உடனடி பெறுபேறுகளை பெற்று தருவதாக கூறப்படும்  ஆககூடுதலான கேள்விகளைக்கொண்ட  அழகு சாதன  பொருட்கள் பலவற்றில் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. காலாவாதியாகும் திகதியும் அவற்றில் இல்லை. தயாரித்த நாடு  தொடர்பான குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான அழகு சாதனங்களில் அடங்கியுள்ள இரசாயனம் குறித்தும் குறிப்பிடப்படாத வைட்னிங் கிரீம் என்ற 6 அழகு சாதன பொருட்கள் நுகர்வோர் தொடர்பான அதிகார சபையால் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் சிலவற்றில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றில் மனித உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய உலோகத்தன்மை குறித்த அறிக்கை ஒன்று பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கையுடன் மாலிகாகந்த நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் இது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாவனையாளர்களை தவறான வழியில் இட்டுச் சென்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரீம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் அனைவர்களுக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆககூடுதலான கேள்விகளை கொண்டவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை.  கிரீம் வகைகளை சந்தையில் இருந்து அகற்றுமாறும் கிரீம் வகைகளின் வர்த்தக குறியை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, நுகர்வோர் தொடர்பான அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனையின் போது இவற்றில்  ஈயம் ஹாசனிக் உள்ளிட்டவை அளவுக்கதிகமாக காணப்பட்டுள்ளது.

இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய அவற்றில் அடங்கியுள்ளவற்றை கவனத்தில் கொள்ளுமாறும் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .