2020 ஜூன் 01, திங்கட்கிழமை

உணவு உற்பத்தி வார நிகழ்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.இஸட்.ஷாஜஹான்

தேசிய உணவு உற்பத்தியை மேம்படுத்தும் உணவு உற்பத்தி வாரம் நேற்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய, இன்று (07) நாட்டில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் உணவு உற்பத்தி வாரத்தையிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் ஓர் அங்கமாக நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி, வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் பாடசாலை அதிபர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின, உணவு உற்பத்தி வாரம் தொடர்பான உரை, இயற்கை உரம் தயாரித்தல் அதன் முக்கியத்துவம்  தொடர்பான  உரை என்பன இடம்பெற்றன. பின்னர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களால் பல்வேறு காய்கறி, மரங்கள் நடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X