2021 மார்ச் 06, சனிக்கிழமை

உயிரிழந்த நபருக்கு தொற்று இல்லை

S. Shivany   / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம் 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்  தற்கொலை செய்து உயிரிழந்த, களுத்துறை டிப்போவில் பணியாற்றிய சாரதிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லையென, பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை- நாகொடை  பொது வைத்தியசாலையில் இருந்து, மத்துகமை நகருக்கு  வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ,லங்கை போக்குவரத்து சபையின்,  களுத்துறை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே, கடந்த 8ஆம் திகதி உயிரிழந்தார்.

களுத்துறை- நாகொடை பொது  வைத்தியசாலையில் பணிபுரியும்  ஊழியர் ஒருவர்,  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையத்து,  தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .