2020 ஜூலை 15, புதன்கிழமை

கைதி தப்பியோட்டம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

மத்துக நீதிமன்ற சிறைக்கூண்டில்  தடுத்து  வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், கழிப்பறை  கூரையை உடைத்துகொண்டு நேற்று (29) அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட பொல்கம்பளை  பகுதியைச் சேர்ந்த 37  வயதுடைய இவர், நேற்று கைதுசெய்யப்பட்டு,  மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைக்கூண்டில்  சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த மேற்படி  சந்தேக நபர், மாலை 3.00 மணிளவில், மலசலகூட கூரை வழியாக தப்பியோடியுள்ளாரென,  பொலிஸார்  தெரிவித்தனர்.

இ​தனையடுத்து, தப்பியோடிய சந்தேக நபரை கைதுசெய்வதற்காக, நீதவான் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X