Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்களின் கண்ணாடிகளை உடைத்து, 62 இலட்சம் ரூபாய் பெறுமதியான மடிகணினி, அலைபேசிகள் உட்பட பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய பிரதான சந்தேகநபர் உட்பட ஏழு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.
குளியாபிட்டிய, கம்புராபொல, மூனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏனைய ஆறு சந்தேகநபர்களும், கொழும்பு -12 வாழைத்தோட்டம் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் பிரதான சந்தேகநபர், கட்டுநாயக்க பஸ் நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் நேற்று (27) நீஆஜர்செய்தபோது, அவர்களை டிசெம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .