2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

புற்றுநோய் வைத்தியசாலையில் பூனைகள் நடமாட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சில நோயாளர் விடுதிகளில், பூனைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சிகிச்சை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக, நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சுற்றித் திரியும் பூனைகள், பகல், இரவு வேளைகளில் நோயாளர் விடுதிகளில் உள்ள படுக்கைக்கு அடியில் இருப்பதாலும், அந்தப் பூனைகள் இருந்த இடத்தை சுத்தம் செய்வதிலும், கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம். குமாரசிறி தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலை, கிராமப்புறத்தை அண்மித்த பகுதியாகக் காணப்படுவதால், அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள பூனைகள், வைத்தியசாலைக்கு வருகின்றன. எவ்வாறாயினும், இந்தப் பூனைகள் நோயாளிகள் இல்லாத விடுதிகளுக்கே வருவதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X