2020 ஜூலை 15, புதன்கிழமை

பெண்ணிடம் கொள்ளையடித்த நால்வர் கைது

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெண்ணொருவருக்குச் சொந்தமான, சுமார் 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளை, பஸ்ஸில் வைத்துக்கொள்ளையடித்த கும்பலொன்றைச் சேர்ந்த நால்வரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

28 மற்றும் 47 வயதுக்குட்பட்ட இந்நால்வரும், பணம் சம்பாதிப்பதற்காக, பல நாட்களாக, இவ்வாறு நகைகளைக்கொள்ளையடித்து வந்துள்ளமை, முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து, தன்னுடைய ​உறவினர் வீடொன்றுக்கு பஸ்ஸில் பயணித்த பெண்ணின் கைப்பையின் கைப்பிடியை வெட்டியெடுத்துக்கொண்டு, கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்​படையிலேயே, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X