2020 ஜனவரி 20, திங்கட்கிழமை

போதைப்பொருள் கடத்திய இந்தியப் பெண் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டு கிலோ கிராம் போதைப்பொருளுடன், 31 வயதுடைய இந்திய நாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான இப்பெண், தனது பயணப்பையில் மிகவும் சூட்சுமமான முறையில், 8 கிலோ கிராம் போதைப்பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, இந்தியாவிலிருந்து வந்த விமானமொன்றில், கட்டுநாயக்க வந்திறங்கி, அங்கிருந்து வெளியேறும்போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தப் பெறுமதி, 35 இலட்சம் ரூபா எனத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை, 24ஆம் திகதி வரை தடுப்புக் காவலில்  வைக்குமாறு, மினுவாங்கொடை நீதிமன்ற பதில் நீதிவான் அத்துல குணசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .