2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

மாணவர்களை இலக்குவைத்து நடன மாத்திரை விநியோகம்

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் கல்வி கற்கும் மாணவர்களை இலக்குவைத்து, ஒருவகை போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

“நடன மாத்திரை”  (Dancing Tablet ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதி விசேட போதைப்பொருள் அடங்கிய இந்த வில்லைகளை, சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து, இந்நாட்டு முகவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தருவித்து, மாணவர்களுக்கு விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

பெரும்பாலும் இந்த மாத்திரைகள், களியாட்ட மற்றும் நடன நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இதனை உட்கொள்வதன் மூலம், தன்னை மறந்து களியாட்ட வைபவங்களில் ஆடிப்பாடி மகிழ்வர்.  

இது தொடர்பில், பெற்றோர் எந்நேரமும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பெற்றோரை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  

மேலும், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில், இவ்வாறான நடன நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இச்செயற்பாட்டுக்கு, பிரத்தியேக வகுப்பு மாணவர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, நம்பகரமானத் தகவல் ஊடாக தெரியவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  

கடந்த வாரம் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு முழுவதும் இடம்பெற்ற களியாட்ட வைபவமொன்றின்போது, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள், இந்த நடன மாத்திரையை உட்கொண்ட நிலையில் நடனம் ஆடியுள்ளனர்.  

இதில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் இளம் வயதுடைய இளைஞர், யுவதிகள் எனத் தெரியவந்துள்ளது.  

இது தொடர்பில், விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .