2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

மீன் இறக்குமதிக்கு தற்காலிக தடை?

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில், மீன்பிடித்தல் அதிகரித்துள்ளதால், கொப்பரா, தலபத் தவிர்ந்த ஏனைய மீன்களை இறக்குமதி செய்ய, தற்காலிகமாகத் தடை விதிக்குமாறு, நிதியமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பேலியகொடயிலுள்ள மத்திய மீன் விற்பனை நிலையத்தின் விற்பனையாளர்களுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்பொழுது நிலவும் வானிலை காரணமாக, தெற்கு கரையோர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து கரையோரப் பிரதேசங்களிலும் கிடைக்கும் மீனின் தொகை அதிகரித்துள்ளது. அதனால், 120,000 மெற்றிக் தொன் அளவிலான மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் விலை, வெகுவாகக் குறைந்துள்ளது.

“தெற்குக் கரையோரம் அடங்கலாக நாட்டின் ஏனைய கடற்கரையோரப் பிரதேசங்களிலிருந்து, இந்த மீன்கள் வருகின்றன. முக்கிய மீன்வகைகள் பெருமளவில் கிடைப்பதால், அவற்றின் விலைகளிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. தற்பொழுது இவ்வாறான மீன்கள், 1 கிலோகிராம் 100 ரூபாய்க்கும் 150 ரூபாய்க்கும் இடையில் விற்பனை செய்யப்படுகின்றன.

“இதன் காரணமாக கொப்பரா, தலபத் தவிர்ந்த ஏனைய மீன்கள், ரின் மீன்வகைகளை இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X